search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் புகார்"

    • மாணவிகளை பகடைக்காயாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.
    • ஆசிரியர்களில் ஒருவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் அளித்தார்.

    மதுரை :

    மதுரை கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வைத்திருந்த புகார் பெட்டியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கடிதம் கிடந்தது. அதில், பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கும் தகவல் கொடுத்தார்.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணை அடிப்படையில், முதற்கட்டமாக பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் என 3 பேர் மீது கருப்பாயூரணி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, போக்சோ வழக்கில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில் சக ஆசிரியர்கள் மீதான விரோதப்போக்கில் மாணவிகளை வைத்து, பொய் புகாரை தலைமை ஆசிரியர் அளித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். எனவே இதுபற்றி விசாரணை நடத்துமாறு, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி புலன் விசாரணை நடந்தது.

    பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 2 மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் ஊமச்சிகுளம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    அப்போது அந்த மாணவிகள், தாங்களாக அந்த கடிதத்தை எழுதவில்லை என்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதால்தான் அவ்வாறு செய்தோம் எனவும், யாரும் எங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இது சம்பந்தமாக கோர்ட்டு நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட பகையில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளை பழிவாங்க மாணவிகளை பகடைக்காயாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பயன்படுத்தி பாலியல் புகார் அளிக்க வைத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, இதுகுறித்து இறுதி அறிக்கை, கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி, மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலும், வழக்கின் சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் கடந்த 31-ந் தேதி பொய் புகார் என தீர்ப்பளித்து, வழக்கு முடிக்கப்பட்டது.

    மேற்கண்ட தகவல்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தனது சுயலாபத்திற்காக மாணவிகளை பொய் புகார் அளிக்க வைத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எல்தோஸ் குன்னப்பிள்ளை மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எல்தோஸ் குன்னப்பிள்ளை.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

    பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவுப்படி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது.

    இந்த நிலையில் புகார் கூறிய ஆசிரியையை, எல்தோஸ் எம்.எல்.ஏ. தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணை, அவமரியாதை செய்ததாகவும் போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் எல்தோஸ் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து அவர் மீது 2-வது போக்சோ வழக்கு பதியப்பட்டு உள்ளது.
    • கைதான மடாதிபதிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    கர்நாடகா:

    கர்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பள்ளி சிறுமிகள் இருவர் பாலியல் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் உள்ளார். ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனு விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து அவர் மீது 2-வது போக்சோ வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    இதனால் கைதான மடாதிபதிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    • ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    • குற்றவாளிக்கு சாதகமாக போராட்டம் செய்வதாக கூறி அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று ஊர் முக்கியஸ்தர்களை கலெக்டர் எச்சரித்தார்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதை (வயது 59). இவர் தோகைமலை அருகே உள்ள பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்த தகவலின் பேரில், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மருதை மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆசிரியர் மருதை மீது போக்சோ உள்ளிட்ட வழக்குப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் மருதையை விடுதலை செய்யக்கோரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த கலெக்டர் பிரபு சங்கர், எஸ்.பி. சுந்தரவதனம், குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவ, மாணவிகளை மட்டும் தனியாக ஒரு அறைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களை வரவழைத்து விசாரித்தனர்.

    அதன் பிறகு மாணவ, மாணவிகள் எழுதிக் கொடுத்த புகாரை அவர்களின் பெயர்களை வெளியிடாமல் படித்துக் காட்டினர். மாணவிகளிடம் ஆசிரியர் மருதை 3 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், அந்த பிரச்சினைகளை அப்போது பணியில் இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேசி முடித்து வைத்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த வாரம் இப்பள்ளியில் பாலியல் சீண்டல், போக்சோ சட்டம் குறித்து நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் தனித்தனியாக தகவலை எழுதி கேட்டபோது, சில மாணவ, மாணவிகள் மருதை ஆசிரியர் எப்படியெல்லாம் பாலியல் சீண்டல் செய்தார் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, ஆசிரியர் மருதை கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆகையால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெற்றோர்களை கலைந்து போகச் சொல்லுங்கள். இல்லையென்றால் குற்றவாளிக்கு சாதகமாக போராட்டம் செய்வதாக கூறி அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று ஊர் முக்கியஸ்தர்களை கலெக்டர் எச்சரித்தார்.

    அதன் பிறகு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பொம்மநாயக்கன்பட்டி பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 வரை பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
    • பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருச்சி, ஆக.18-

    திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பேராசிரியர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

    அவர் எம்.ஏ. மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் பி.எச்.டி. மாணவிகளை குறிவைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் விசாரணைக்கு முற்பட்டபோது மேலிட செல்வாக்கை சொல்லி மிரட்டியதாக கூறப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அந்த மாணவி புகார் அனுப்பினார். அதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரனை கமிட்டி அமைத்து விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த அறிக்கை அனுப்பப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி, பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்கள் கமிட்டிகளை அமைத்திட வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு தனியார் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் மைதிலி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சாவித்திரி, சங்க நிர்வாகிகள் வசந்தி, செல்வி, லட்சுமி, சரஸ்வதி, பானுமதி, கவிதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் பவித்ரா தேவி வரவேற்றார். மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், மத்தியகுழு உறுப்பினர் பிரமிளா, மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    திருப்பூர் மாவட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்து பெண்கள் வந்து வேலை செய்து வருகிறார்கள். பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி , பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்கள் கமிட்டிகளை அமைத்திட வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர் . ஆனால் மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது . மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்ந்த போதும் , படுக்கை வசதி ,குடிநீர், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையாக உள்ளது. அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். திருப்பூர் மாநகராட்சியாகவும், ஸ்மார்ட் சிட்டியாகவும் தரம் உயர்ந்து உள்ளது. ஆனால் வார்டுகளில் குப்பை ,சாக்கடை தூர் வாராமல் தேங்கி இருக்கக்கூடிய நிலையிலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதால், மழைநீர் வீடுகளில் புகுந்து விடும் நிலையாக உள்ளது .

    ஆகையால் அடிப்படை வசதிகள் துரிதமாக செய்து தர வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றிட வேண்டும். தகுதியுடைய அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முறையாக வழங்க வேண்டும் ்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் வழக்கறிஞர் தமயந்தி, டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன், எஸ். எப். ஐ. சம்சீர் அகமது, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் பரமசிவம், மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாலியல் புகார் கூறியுள்ள பெண்ணின் கணவர், காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
    • அரசியல் ரீதியாக பழிவாங்க பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக தனி செயலாளர் தகவல்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்து வரும் 71 வயதான பி.பி. மாதவன் மீது டெல்லி உத்தம்நகர் போலீஸார், பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக, டெல்லியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் கூறியுள்ளார்.

    இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் மிரட்டப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து மாதவன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாதவன், அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையிலும், தனது இமேஜை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

    பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் கணவர், காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


    • திருச்சி தொழிலதிபர் பணியின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்
    • நிறுவனத்தின் உரிமையாளர் என்னுடன் அன்பாக பேசி பழகி வந்ததோடு சில நாட்களில் அவர் நட்பாக எனக்கு செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பினார்

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் இன்று திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    நான் திருச்சி கண்டோன்மென்ட் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கேசியராக வேலைபார்த்து வந்தேன்.

    அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்னுடன் அன்பாக பேசி பழகி வந்தார். பின்னர் அவர் நட்பாக எனக்கு செல்போனில் குறுந்தகவல்களை அனுப்பி வந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து என்னிடம் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட தொடங்கினார்.

    பல முறை அதனை நான் தடுத்தும், கண்டித்தும் பலனில்லை. இதனால் எனக்கு மிகவும் மன வேதனை ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். என்னிடம் விசாரணை நடத்தினார்கள்.

    இருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அந்த நபர் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தான் வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டிய ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததால், மாணவியின் உறவினர்கள் ஆசிரியரை கடுமையாக தாக்கினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் மேட்டூர் சாலையில் உள்ள தனியார் டுடோரியல் கல்லூரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

    இந்நிலையில் இங்கு படித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவி, தனக்கு பாடம் நடத்தும் சுந்தரம் என்ற ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து 4 வாலிபர்கள் அங்கு சென்று ஆசிரியரை அடித்து உதைத்துள்ளனர்.

    தகவலறிந்த அங்கு வந்த போலீசார் ஆசிரியரை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஆசிரியரிடம், மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவி ஒருவரை காதலித்ததும், அது ஆசிரியருக்கு தெரியவரவே வீட்டிற்கு தெரிவித்து விடுவதாக மிரட்டியிருக்கிறார். இதை திசை திருப்புவதற்காக மாணவி ஆசிரியரை உறவினர்களிடம் சிக்க வைத்தது தெரியவந்தது. 

    இதில் காயமடைந்த ஆசிரியர் சுந்தரம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கூறிய சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    உத்தரபிரதேசத்தில் குல்தீப்சிகை தொடர்ந்து மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
    பரெய்லி:

    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. குஷாகரா சாகர் மீது 22 வயது பெண் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அந்த பெண், போலீசில் கொடுத்த புகாரில், “2012-ம் ஆண்டு எனக்கு 16 வயது இருந்தபோது குஷாகரா சாகர் வீட்டில் வேலை செய்து வந்தேன். அப்போது அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் எம்.எல்.ஏ. ஆன அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. என்னை ஏமாற்றியது குறித்து கேட்டபோது ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு தருவதாக கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக குஷாகரா சாகர் கூறுகையில், “2014-ம் ஆண்டு இதேபோல் அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். தற்போது மீண்டும் பணம் பறிக்க திட்டமிடுகிறார்” என்றார்.
    ×